கொன்றால் பாவம் விமர்சனம் (3/5)

வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ், சென்ட்ராயன், சுப்ரமணிய சிவா என சிலர் நடிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கொன்றால் பாவம்”.

கதைப்படி,

வறுமையின் காரணமாக மல்லிகாவிற்கு (வரலட்சுமி) திருமணம் நடக்காமல் இருக்கிறது. இந்த சமயத்தில்தான் வழிப்போக்கனாக அர்ஜுன் (சந்தோஷ்) இந்த குடும்பத்தில் சேர்கிறார். அவரிடம் இருக்கும் பணம், நகைகளை பார்த்தவுடன் சார்லி, ஈஸ்வரி, வரலட்சுமி என குடும்பமே பேராசைப்படுகிறது. பின் அந்த குடும்பம் பணத்திற்கு ஆசைப்பட்டு அவனை கொலை செய்ய நினைக்கிறது. இறுதியில் அந்த குடும்பம் அர்ஜுனை கொன்றார்களா? பணம், நகைகள் என்னானது? இறுதியில் அந்த குடும்பத்தின் நிலை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து இருக்கிறார். வழக்கம் போல் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

வரலட்சுமி அப்பாவாக சார்லியும், அம்மாவாக ஈஸ்வரியும் நடித்திருக்கிறார்கள். சில ட்விஸ்ட் காட்சிகளில் அவர்கள் வெளிப்படுத்திய எக்ஸ்பிரேஷன்கள் பிரம்மாதம்.

திரில்லர் பாணியில் கதையை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், முதல் பாதி தொய்வாகவும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் 1ஸ்ட் கீரில் ஆரம்பித்து டாப் கீரில் பட்டையை கிளப்பியுள்ளார் இயக்குனர் தயாள்.

படத்தின் ஹீரோ என்றால் சாம்.சி.எஸ் தான். படத்தின் இசையே படத்தை ரசிக்க காரணமாக அமைந்தது.

பெரிதாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. முழு படமே ஒரு வீட்டைச் சுற்றியே நகர்கிறது.

ஆசை, பேராசை அதிகமானால் ஒரு மனிதன் என்னெல்லாம் செய்கிறான் என்பதை படத்தின் மூலம் இயக்குனர் உணர்த்தி இருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி சிறப்பு.

கொன்றால் பாவம் – தின்றால் போகும்.