பல்லு படாம பாத்துக்க விமர்சனம் 

PALLU PADAMA PATHUKA REVIEW

இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா, ஷாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் “பல்லு படாம் பாத்துக்க”.

குஞ்சுதண்ணி காடு என்ற ஒரு இடத்தில் ஜாம்பிகள் இருக்கின்றன. அந்த இடத்தில அட்டகத்தி தினேஷ் மற்றும் சிலர் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களை காப்பாற்ற சஞ்சிதா ஷெட்டி வருகிறார். அந்த காட்டில் ஜாம்பிகள் எப்படி வந்தன? தினேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் எதற்காக அந்த காட்டுக்குள் சென்றனர் என்பது படத்தின் கதை. இதில் அடல்ட் காமெடியை சிறிதளவு சிதற விட்டுருக்கிறார் இயக்குனர் விஜய் வரதன்.

தினேஷ், லிங்கா, ஜெகன், தீனா, ஷா ரா என பலரும் எதற்காக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தனர் என்று தெரியவில்லை. அடல்ட் காமெடி படத்தில் காமெடியும் இல்லை அடல்ட் கண்டென்ட்டும் இல்லை.

சஞ்சிதா செட்டி ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியுள்ளார்.

கதை இல்லை, திரைக்கதை இல்லை, அடல்ட் காமெடி இல்லை, ரோமன்ஸ் இல்லை ஒரு A படத்திற்கு என்ன தேவையோ அது எதையும் இல்லாமல் பார்த்து பக்குவமாக இயக்கியுள்ளர் இயக்குனர் விஜய் வரதராஜ்.

பல்லு படாம பாத்துக்க – குடோனில் இருக்க வேண்டிய பருத்தி மூட்டை.