ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த GBU படம் அறுபது கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அடுத்த படத்திற்காக இணைந்துள்ளார்.
அதாவது AK எப்படி Red Dragon-னாக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாம்.
இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் அல்லது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளார். இந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கும் படப்பிடிப்பு 2026 அடுத்த வருட பிப்ரவரியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை ஜூன் 2026 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து விடலாம் என்று பிளான் போட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் சினிமாவை விட கார் ரேஸில் அஜித் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார், அதேபோல உலக அளவில் புகழ்பெற்றும் வருகிறார்.
270 கோடிக்கு எடுக்கப்பட்ட குட் பேட் அக்லி உலகளவில் 220-240 கோடி வரை வசூல் செய்திருக்கலாம், கூட்டி கழிச்சு பார்க்கும்போது நஷ்டத்தில் தான் முடிந்துள்ளது. ஆனாலும் அஜித் திரும்ப ஆதிக் வாய்ப்பு கொடுப்பதற்கு என்ன காரணம் என்பது கோலிவுட் வட்டாரத்திற்கு கேள்விக்குறியாக உள்ளது.
KGF படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்ரீநிதி செட்டி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இல்லை என்றால் நயன்தாரா இணையலாம் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 350 கோடி வரை ஐசரி கணேஷ் இதில் முதலீடு செய்ய உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஒரு Gangster கதையை தான் அஜித்துடன் உறுதி செய்துள்ளாராம்.
இதனால் அதே காம்போ மீண்டும் வெற்றி பெறுமா என்ற பயத்தில் தான் ரசிகர்களும் உள்ளனர். ஆனால் அஜித் கணக்கு தப்பவே தப்பாது முதல் வாட்டி Fanboy மொமெண்ட் என்பதால் Red dragon எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த வாட்டி கண்டிப்பாக சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.