தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், டிஜே ஞானவேலின் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இமயமலையில் ரஜினி இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இறை பக்தி கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது இமயமலைக்கு பயணம் செய்வது இயல்பானது. அந்த வகையில், தற்போது இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.