
kollywood newsBy Ottran Dorai|2025-09-22
‘அதீரா’ – பிரசாந்த் வர்மாவின் அடுத்த சூப்பர் ஹீரோ பிரம்மாண்டம்!
சினிமா ரசிகர்களை தனித்துவமான படைப்புகளால் கவர்ந்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் வர்மா, தனது அடுத்த படைப்பை ரசிகர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளார். ‘அதீரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர்ஹீரோ படம், தற்போது பரபரப்பாக படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறது.
இந்த படத்தில் கல்யாண் தாசரி ஹீரோவாக அறிமுகமாக, தமிழ் சினிமாவின் பல்திறமைசாலி எஸ்.ஜே.சூர்யா வில்லனாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட தயாரிப்பாளரான ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார். மேலும், ‘ஹனுமான்’ படத்தில் பிரசாந்த் வர்மாவுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஷிவேந்திரா தாசரதி, இசையமைப்பாளர் ஸ்ரீ சரண் பகாலா, புரொடக்ஷன் டிசைனர் ஸ்ரீ நாகேந்திர தங்காலா ஆகியோர் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
சமீபத்தில் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எரிமலை வெடிப்பில் இருந்து அசுர வல்லமை கொண்ட பழங்குடி போர்வீரராக எழும் சூர்யா – அதற்கு எதிரே மின்னல் சக்தியுடன் அதீரா! இந்த போஸ்டர், படம் எவ்வளவு பிரம்மாண்டமான ஹீரோ-வில்லன் மோதலை கொண்டிருக்கப் போகிறது என்பதற்கு சாட்சியமாக அமைந்துள்ளது.
இந்திய இதிகாசங்களையும், நவீன திரைத் தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாகும் PVCU (Prasanth Varma Cinematic Universe) வின் அடுத்த அத்தியாயமாக உருவாகும் இந்த படம், அதிரடி சண்டைகள், பரபரப்பான காட்சிகள், மின்னல் முழக்கம் போல ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களை கொண்டிருக்கிறது.
